திங்கள், 4 மே, 2009

தவம் !

எல்லாம் வல்ல இறைவனே ! உன்னை நான் பெறுவதற்கு தவமே வடிவெடுத்தவன்ஆவேனாகுக !


பழைய இரும்பைப் புதியதாக்கலாம். இரும்பின் வடிவத்தையும் வேண்டியவாறு
மாற்றி விடலாம், உலையில் இட்டு உருக்குதல் ஒன்றே அதற்கெல்லாம் உற்ற
உபாயம். மனிதன் தன்னைப் புதிப்பிக்கவும் தன் இயல்பை மாற்றவும் முடியும்.
பேருணர்ச்சி உள்ளத்தில் பொங்கி எழுந்து கொண்டிருந்தால் அது தவமாகிறது.
அவ்வுணர்ச்சி யிலிருந்துதான் எண்ணிய நிலையைப் பெறுதல் எளிதாகிறது.

சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் தவம் செய்பவர் துன்பத்தால் வருந்த
வருந்த மெய்யுணர்வு பெருகும்.சுயநலம்,அகந்தை,ஆணவம் நீங்கப்பெற்ற
தவசீலரை உலகில் மற்ற உயிர்கள் எல்லாம் வணங்கும்.

விரும்பியதை விரும்பியபடி அடையச் செய்வது தவம்.இதனை இப்பிறவியிலேயேசெய்வோம்.

தவம் இருப்போம் ! தழையும் உயிர்க்குத் தளம் அமைப்போம் ! !

கருத்துகள் இல்லை: