வெள்ளி, 1 மே, 2009
உழைப்பு !
ஓயாது உழைக்கும் ஓங்காரப் பொருளே. என் வாழ்வும்
மேம்பட்டு இருக்க உழைப்பே வடிவெடுத்திருப்பேனாக !
அண்டங்கள் அனைத்தையும் இயக்குதலில் இறைவனுக்கு
ஓய்வு என்பதில்லை. அவனது பேருழைப்பால் புவனம்
புனிதத்தைப் பெற்று வருகிறது. நம்மை இயக்கும் இறைவனை
நாம் உணரவேண்டும்.
உணவைக் கையால் எடுத்து வாயில் போட்டு பல்லால்
அரைத்து விழுங்குகிறோம். நம் பணி அதுவரைதான்
அரைத்த உணவு கூழாகி பல் வேறு சத்துக்களாகப்
பிரிந்து உடலில் தேவைப்பட்ட இடங்களுக்கு
இரத்தமாகி விநியோகித்து நம்மைப் பராமரிக்கச்செய்வது யார்?
கால அவகாசம் எடுத்தாலோ வாராந்திர விடுமுறை
விட்டாலோ என்னவாகும்?
பிறந்ததிலிருந்து துடிக்கத்துவங்கிய இதயம் இன்னும்
தன் கடமையை சிறிதும் தவறாது செய்து வருகிறது.
நம் உத்தரவு ஏதுமின்றி ஜீரணமாவதும் இதயம் துடிப்பதும்
நல்ல வேளை இறைவன் எடுத்துக் கொண்டதால் நாம்
இன்னும் பிழைத்திருக்கிறோம்
முறையுடன் உழைப்பவர் இறைவணக்கம் செய்கின்றனர்
முன்னேற்றமடைகின்றனர். உழைக்கக் கற்றவன்
வாழக் கற்றவன் ஆகின்றான்.
இன்று உறுதி எடுப்போம்! என்றும் உழைப்போம் நன்றே உயர்வோம் ! !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக