சனி, 2 மே, 2009

வேகம் !




தேங்கிய தெளிநீரில் அடிப்பரப்பு பளிங்குபோல் தென்படுகிறது.
வேகம் தணிந்து ஓய்ந்த மனதில் ஒளிமிக்க இறைவா நீ
அங்கு நன்றாக ஒளிர்ந்து மிளிர்கின்றாய் !
-- -- -- -- --

சூறாவளி வீசுகிறது சுற்றுப்புற செடிகொடிகளை நிலைகுலையச் செய்து
விடுகிறது. அவைகள் காயப் பட்டவை போன்று ஆகிவிடுகின்றன.
பின்பு அமைதி நிலவும்போது அவை யாவும் சிகிச்சை பெறும் சாந்தத்தில்
இருக்கின்றன. பறந்த மண்ணும் வீசிய தூசியும் அடங்கி அமைதியுண்டாகிறது.

அதுபோல மனக் கொந்தளிப்பு அடங்கியபின் தனது மகத்தான தன்மையில்
நிலைத்திருக்கும் பாங்கு அதற்கு வருகிறது. பொருள்களின் தாரதம்மியம்
மனதுக்கு அப்போது விளங்குகிறது. நல்லறிவை வளர்ப்பதற்கு அதுவே
தருணமாகும்.சாந்தி நிலவும் போது சஞ்சலம் இருப்பதில்லை.
மனதில் அமைதி இருந்தால் வாக்கினில் இனிமை இருக்கும்.

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க ! !

கருத்துகள் இல்லை: