வியாழன், 30 ஏப்ரல், 2009

கப்பலின் வரிசை கண்கொள்ளாக் காட்சி ! !



பாய்மரக் கப்பலின் அணிவகுப்பு

பார்க்க வருவோர்க்கு பெரும் வியப்பு

மாய வித்தையென ஜொலி ஜொலிப்பு

மயக்கும் வண்ணங்களில் ஒளியமைப்பு !

அறம் !

அறம் என்பது தருமம் . அறம் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும் .
அறம் பலவகைப்பட்டது. வாழ்க்கைக்குத் தகுந்த செயல் எது என்று
வரையறுக்கப்பட்டது அறம். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அது அமையும்.
பொம்மைகளை வைத்து விளையாடுவது குழ்ந்தைகளின் அறம். முதியோர்க்கு
அது அறமாகாது. பொதுவாக பொறாமை, ஆசை, கோபம், க்டுஞ்ச்சொல்
இவைகளை நீக்கி நாம் செய்கின்ற செயல்கள் அறச்செயலாகும் . அறம்
செய்வதைவிட மேம்பட்ட செயல் இல்லை.
தகாத வழியில் சம்பாதித்து தான் என்ற அகந்தையுடன் தர்மத்துக்கு மாறான
செயல் புரியவா இந்த மனித ஜன்மம் எடுத்தோம்? சரியா தவறா தங்களது
மனதைக் கேட்டுச்செயயுங்கள்.

மாசில்லா மனம் கள்ளம் காட்டாது . மனதோடு உதவுங்கள் மகிழ்வோடு
வாழுங்கள் ! !

புதன், 29 ஏப்ரல், 2009

அன்பு !

அன்பாகிய திருவருளும் இன்பமாகிய சிவனும் மணியும் ஒளியும் போல்
ஒன்றேயாகும் . அன்பு சிவனின் திருமேனி . எனவே அன்பே சிவமாகும்
இறைவனிடம் அன்பு செலுத்துவோம் . இருக்கும் வாழ்வை இனிமையாக்குவோம் .அன்பால் சாதிக்கமுடியாது அகிலத்தில் ஏதுமில்லை .
புதியவரைக் கண்டால் ஒரு புன்னகை.புரிந்தவர் வந்தால் ஒரு விசாரிப்பு .
நல்ல உள்ளத்தோடு நலம் பாராட்டுங்கள் . நாமும் வாழ்வோம் மற்றவரையும்
வாழ வைப்போம் என்ற எண்ணம் என்றும் மனதில் அடிநாதமாக ஒலிக்கட்டும்
பரிட்சித்து பாருங்கள் உங்களுக்குள் மாற்றம் தெரிவது நிச்சயம் .
மனதில் அன்பு ஊறட்டும் . வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் .

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

வியாழன், 23 ஏப்ரல், 2009

பழநிமுருகன்!


பழநி முருகனைப் பாடிவருவோம்!
பல் உயிரும் வாழவே வேண்டி நிற்போம்!
அழகன் குமரனையே தேடிவருவோம்!
அடைக்கலப் பொருளாக நாம் இருப்போம்!
கழலின் தண்டையொலி கேட்டுவருவோம்!
கடம்பனை கந்தனைக் கண்டுமகிழ்வோம்!
குழகன் திருவடியே சரணம் செய்வோம்!
குன்றெல்லாம் அவனையே கொண்டாடுவோம் ! !

காத்திடுவாள் கரியகாளி !

கரியகாளி அன்னையே
காத்திடுவாய் என்னையே
அரியசக்தி நின்னையே
அடிபணிந்தேன் என்றுமே
இனியதான இறைவியே
இணையில்லாத தலைவியே
கனியதான வாழ்வெனக்கு
கருணை செய்வாய் என்றுமே
மகிமையான மாரியே
மகவு காக்கும் சூலியே
அகில முழுதும் தழைக்கவே
அருள் புரிவாய் என்றுமே ! !

வினாயகா போற்றி !


முழுமுதற் கடவுளே போற்றி!
மூஷிக வாகனா போற்றி!
எழுகின்ற ஞாயிறே போற்றி!
எளிமையின் உருவே போற்றி!
விழுமிய வினாயகா போற்றி!
விக்கினங்கள் தீர்ப்பாய் போற்றி!
ஒழுக்கத்தின் உயர்வே போற்றி!
ஓங்காரப் பொருளே போற்றி போற்றி !